பிரித்தானிய பிரதமர் இல்லத்திலிருந்து பொலிசாரால் முரட்டுத்தனமாக வெளியேற்றப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சி பின்னணி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நேற்றிரவு இளம்பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் இல்லத்திலிருந்து பொலிசாரால் முரட்டுத்தனமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

அந்த இளம்பெண் முன்னாள் சேன்ஸலரான Philip Hammondஇன் சிறப்பு ஆலோசகரான Sonia Khan ஆவார்.

பயங்கர குற்றவாளிகளை பின்புறமாக கைகளை மடக்கிப்பிடித்து தள்ளிச்செல்வதுபோல Sonia Khan பொலிசாரால் முரட்டுத்தனமாக பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட காரணம்?

பிரெக்சிட் ரகசியங்களை முன்னாள் சேன்ஸலரான Philip Hammondக்கு லீக் செய்ததற்காக Sonia Khan வெளியேற்றப்பட்டுள்ளார்.

Sonia Khanஐ வெளியேற்றியவர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசில் தலைமை சிறப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள Dominic Cummings.

Sonia Khan ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டை நிறுத்த முன்னாள் சேன்ஸலரான Hammond உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவியதாக Cummings குற்றம் சாட்டியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டை Sonia Khan மறுத்தபோது, அவரது மொபைல் போனை தன்னிடம் கையளிக்குமாறு Cummings கேட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

உடனடியாக பொலிசாரை அழைத்த Cummings, Sonia Khanஐ வெளியேற்றும்படி உத்தரவிட பொலிசார் அவரை வெளியேற்றியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு ஊழியர் கூறும்போது, Sonia Khan அந்த நிமிடத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறிய Cummings, அவரது மொபைல் போனை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதோடு, அவரது security passம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Sonia Khan தான் நிரபராதி என வாதிட்டும் பொலிசார் அவரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றியதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

போரிஸ் ஜான்சன் பிரதமர் இல்லத்தில் குடியேறியதிலிருந்தே, Cummings அரசின் முக்கிய ஆவணங்கள் ரகசியமாக வெளியாவதை (லீக்காவதை) தடுப்பவர் என பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா, ஒப்பந்தங்கள் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமானால், பிரித்தானியாவில், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறும் ரகசிய ஆவணங்கள் லீக்கானதைத் தொடர்ந்தே Sonia Khan வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்