லண்டனில் கோட்-சூட்டில் கலக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி... கெத்தாக நடைபோடும் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முறை பயணமாக பிரித்தானியா சென்றுள்ளதால் அங்கு அவர் கோட், சூட்டில் அங்கிருக்கும் அதிகாரிகளுடன் பேசும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்ககள் பயணமாக நேற்று புதன்கிழமை காலை சென்னையில் இருந்து ஏமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். அதன்பின் அங்கிருந்து அவர் லண்டன் வந்தார்.

இந்த பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகவும், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருப்பதாகவும் முதல்வர் புறப்படுவதற்கு முன்பு தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று லண்டன் சென்ற முதல்வருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆனால், முதல்வர் வந்த அதே நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்தியாவின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக முதல்வரும், அமைச்சர்களும் மாற்று வழியில் சென்றனர்.

இதையடுத்து தற்போது லண்டனில் இருக்கும் முதல்வர் எடப்பாடி அங்கு கோட், சூட் என ஆளே மாறிப் போய் காட்சியளிக்கிறார், எப்போதும் தமிழகத்தில் வேட்டி, சட்டை என பார்க்கப்பட்ட அவரை, இந்த உடையில் பார்க்கும் போது, அந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் தோரணை வந்துவிட்டதாக அவர் கட்சியின் நிர்வாகிகள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியாவில் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் சந்திப்பு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தி அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. கே.பழனிசாமி அவர்கள் லண்டனில் #NHS நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...