மன்னராட்சி அகற்றப்படும் என மறைமுகமாக மிரட்டும் பிரித்தானிய அரசியல்வாதி: ஆனால் அவரது பின்னணி?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நாடாளுமன்றத்தை பிரித்தானிய பிரதமர் இடைநிறுத்தம் செய்வதற்கு மகாராணியார் அனுமதியளித்துள்ளதால் கோபமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இதனால் மன்னராட்சி அகற்றப்படலாம் என மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Kate Osamor, நாடாளுமன்றத்தை பிரித்தானிய பிரதமர் இடைநிறுத்தம் செய்வதற்கு மகாராணியார் அனுமதியளித்துள்ளதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் காரசாரமாக இரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், மகாராணியாரின் உறவினரான கிரீஸ் நாட்டின் முன்னாள் மன்னருக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அவர் யோசித்துப் பார்க்கவேண்டும், மன்னராட்சி ஒழிக்கப்பட்டது! என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது கிரீஸில் Constantine II என்பவர் மன்னராக இருக்கும்போது, அவர் எடுத்த ஒரு முடிவால் அந்த நாட்டில் மன்னராட்சியே ஒழிக்கப்பட்டது.

இதைத்தான் Kate Osamor குறிப்பிட்டு மறைமுகமாக பிரித்தானிய மகாராணியாருக்கும் இதே நிலை ஏற்படலாம், அவர் பதவியை இழக்க நேரிடலாம் என மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

ஆனால் இப்படி மகாராணியாரை மிரட்டும் Kate Osamorஇன் பின்னணியை நிச்சயம் சற்று திருப்பிப் பார்க்கவேண்டும்.

Kate Osamorஇன் மகன் ஒருமுறை போதைப்பொருள் குற்றத்தில் சிக்கினார்.

அப்போது தனது பதவியை மேற்கோள் காட்டி, அரசு லெட்டர்ஹெட் காகிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார் Kate Osamor. இப்படி அவர் பதவியை துஷ்பிரயோகம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே, தனது மகனை ஒழுங்காக வளர்க்கத்தெரியாத, அவனுக்காக பதவியை துஷ்பிரயோகம் செய்த Kate Osamor, மகாராணியாரை மிரட்டியிருப்பதை மக்கள் எள்ளி நகையாடியிருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்