'சதியை நிறுத்துங்கள்'... பிரித்தானிய பிரதமரின் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதாக பிரித்தானிய பிரதமர் அறிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் ராணியிடம் இன்று காலை ஒப்புதல் கேட்டிருந்தார்.

அதனை ஏற்று செப்டம்பர் 9 முதல் 12 வரையிலும் மற்றும் அதைத்தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் திகதி வரையிலும் நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு மதியம் ராணி ஒப்புதல் அளித்திருந்தார்.

இதன்மூலம் அக்டோபர் 31 ம் தேதி பிரெக்சிட்டைத் தடுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வாய்ப்புகளை மட்டுப்படுத்த பிரதமர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் கூடி ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளை அசைத்தும், கைகளில் பதாகைகளை ஏந்தியும் 'சதியை நிறுத்துங்கள்' என்று கூச்சலிட்டு வருகின்றனர்.

அதேசமயம் தடைக்கு எதிரான ஒரு மனு நள்ளிரவுக்குள் ஒரு மில்லியன் கையெழுத்துக்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரச நிபுணர் ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லாத காரணத்தால் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான முடிவுக்கு ராணி ஒப்புக்கொண்டுள்ளார்.

ராணி தனது ஆட்சியின் போது தனது அமைச்சர்களின் ஆலோசனையை ஏற்க மறுத்ததில்லை. அவர்களின் முன்னுதாரணத்தால் அவர் வழிநடத்தப்படுகிறார்.

" ராணி பாராளுமன்றத்தை இடைநிறுத்துகிறார் " என வெளியாகும் தலைப்பு செய்திகளால், ராணியும் அவரது ஆலோசகர்களும் ‘மனக்கசப்புடன்’ இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...