கண்முன்னே 4 குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்: நீண்ட போராட்டத்திற்கு பின் பரிதாப பலி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன்னுடைய வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் நான்கு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இறந்துள்ளார்.

இங்கிலாந்தின் Walkden பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதியன்று பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று மைக்கேல் பியர்சன் என்பவர் தன்னுடைய குழந்தைகள் டெமி (15), பிராண்டன் (8), லக்கி (7) மற்றும் லியா (3) ஆகியோரை உறங்க வைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது மர்மநபர்கள் நடத்திய பெட்ரோல் குண்டு வீச்சுத்தாக்குதலில், 4 பேரும் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர்.

இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மைக்கேல் பியர்சன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். 20 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் பியர்சன் நேற்று மாலை உயிரிழந்துவிட்டதாக அவருடைய தாய் பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவிதித்துள்ளார்.

முன்னதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஜாக் போலந்துற்கு 40 ஆண்டுகளும், டேவிட் ஒரரால்க்கு 37 ஆண்டுகளும், போலந்தின் காதலி கர்ட்னி பிர்லிலிக்கு 21 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers