அரண்மனை புல்வெளியை டிரம்ப் பாழாக்கிவிட்டார்.. புகார் கூறிய பிரித்தானிய மகாராணி

Report Print Kabilan in பிரித்தானியா

பக்கிங்ஹாம் அரண்மனையின் புல்வெளியை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாழாக்கிவிட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் நகைச்சுவையாக புகார் தெரிவித்திருக்கிறார்.

கடந்த யூன் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் பிரித்தானியாவுக்கு அரசு முறை பயணமாக சென்றார்.

அப்போது, டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் வந்த ஹெலிகாப்டர்கள், ஒரே நாளில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே தரையிறங்கின. இது புல்வெளியில் ஆழமான தடங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Getty Images

இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் பேசிய பிரித்தானிய மகாராணி, ‘வந்து என் புல்வெளியைப் பாருங்கள், அது பாழாகிவிட்டது. டிரம்ப் தான் காரணம்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

இந்த தகவலை மோரிசனுக்கு நெருக்கமான ஒருவர் வெளியிட்டுள்ளார். டிரம்பின் வருகைக்கு பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரித்தானியா புல்வெளிகளை பேணிப்பாதுகாக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...