இளவரசி டயானாவிடமிருந்து குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு வந்துள்ள எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
692Shares

ஆவிகளுடன் பேசும் இரட்டையர்கள் மூலமாக, இளவரசி டயானா, குட்டி இளவரசர் ஆர்ச்சி குறித்த ஒரு எச்சரிக்கை செய்தியை இளவரசர் ஹரிக்கும் அவரது மேகனுக்கும் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆவிகளுடன் பேசும் இரட்டையரான Terry மற்றும் Linda Jamison, மேகன் மற்றும் ஹரியின் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என முன்கூட்டியே சரியாக கணித்தவர்கள் ஆவர்.

அதேபோல், ஹரி மேகன் திருமணத்தன்று ஒரு பட்டாம்பூச்சி வடிவில் இளவரசி டயானா வருகை தருவார் என அவர்கள் கூறியதும், அதேபோல் சரியாக திருமணத்தன்று ஒரு பூச்சி மேகனின் முகத்தை சுற்றியதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது அவர்கள், மீண்டும் டயானா தங்களை தொடர்பு கொண்டதாகவும், தனது பேரன் ஆர்ச்சியைக் குறித்த ஒரு எச்சரிக்கை செய்தியை ஹரிக்கும் மேகனுக்கும் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சி ஒரு அருமையான குழந்தை என்றும், அவனால் தான் பெருமையடைவதாகவும் டயானா தெரிவித்துள்ளதாகவும் அந்த இரட்டையர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த இரட்டையர்கள், ஆர்ச்சி மோசமான முறையில் விமர்சிக்கப்படுவார் என்று டயானா கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சி ராஜ குடும்பத்திலேயே முதல் கலப்பினக் குழந்தையாக இருப்பதால், அவர் மிக கொடூரமாக விமர்சிக்கப்படுவார் என தான் பயப்படுவதாக டயானா கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆவிகளுடன் பேசும் இரட்டையர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்