பிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் எந்த வகை உணவுகள் பிடிக்கும், அவர் எந்த உணவுகளை விரும்பமாட்டார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது

தற்போது இருக்கும் உலகில் சாதரணமாக மக்கள் என்ன சாப்பிட்டாலும், அதை யாரும் பெரிதில் எடுத்துக் கொளவதில்லை.

அதே சமயம் திரைப்பிரபலங்களோ, அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சாப்பிடுகின்றனர்? அவர்கள் எந்த மாதிரி எல்லாம் ஆடை அணிகின்றனர்? அவர்களின் பழக்க வழக்கங்கள் போன்றவைகள் அறிவதில் ஆர்வமாக இருப்பர்.

அந்த வகையில் நாம் சாதரணமாக விரும்பி சாப்பிடும் சில உணவுகள் பிரித்தானியா மகாரணி சாப்பிட்டதே இல்லையாம்.

  • மதிய நேர உணவை எலிசபெத் ராணி சாப்பிடுகிறாரோ அப்போது அவருக்கு வகைவகையான உணவெல்லாம் தேவைப்படாதாம். குறிப்பாக பாஸ்தா போன்ற ஸ்டார்ச் உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். ஏதேனும் சாலட், கிரில் செய்த மீன், சிக்கன் துண்டுகள் மற்றும் ஏதேனும் இரண்டு காய்கறி இதுபோன்று தான் சாப்பிடுவாராம்.
  • அதே போன்று வெறுமனே பிரட், பாஸ்தா போன்ற மாவுப்பொருள்களால் செய்யப்பட்ட ஸ்டார்ச் உணவுகளை மட்டும் ஒதுக்குவதில்லை. ஸ்டார்ச் இருக்கிறது என்பதால் உருளைக்கிழங்கும் அவர் உணவில் இருக்காது என்பது தான் ஆச்சர்யம்.

  • பொதுவாகவே அரச பரம்பரையில் மான், ஒட்டகம், முயல் இப்படி வகைவகையான இறைச்சியை ருசி பார்ப்பார்கள் என்று கேள்விபட்டதுண்டு, ஆனால் ராணிக்குப் சுத்தமாகவே பிடிக்கவே பிடிக்காது. அந்த மாதிரி அரிய வகை இறைச்சியை இவர் சாப்பிட்டதே இல்லையாம்.

  • முட்டை பொரியல், கிறிஸ்துமஸ் சமயங்களில் செய்யப்படுகிற சால்மன், ட்ரபிள் ஆகிய உணவுகளில் நிச்சயம் முட்டை சேர்க்கப்படும். அந்த உணவுகளைப் பார்த்தாலே எலிசபெத் ராணிக்கு பிடிக்காது, இதனால் அவருக்கு முட்டை பிடிக்காது என்பதில்லை, பிரௌன் முட்டை விரும்பி சாப்பிடுவார். அதில் ருசி அதிகம் என்றும் சொல்வார்.
  • வெங்காயமும் பூண்டும் அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவு, அது எந்த உயர்தர உணவாக இருந்தாலும் அதை அவர் சாப்பிடவே மாட்டாராம்.


  • எலிசபெத்துக்கு டீயுடன் ரஸ்க் வைத்து சாப்பிட மிகவும் பிடிக்குமாம். ஆனால் ரஸ்க்கின் ஓரங்களில் இருக்கும் பிரௌன் கலர் க்ரஸ் பிடிக்காதாம். அதனால் அவர் டீ குடிக்கும்முன், ரஸ்க்கின் ஓரங்களில் இருக்கும் பிரட் க்ரஸ்டை வெட்டி பறவைகளுக்காக சேமித்து வைக்கச் சொல்வாராம்.

  • பொதுவாக மதிய உணவிற்கு பழங்கள், சாலட் சாப்பிடுவது வழக்கம். ஆனால் சீசன் இல்லாத ஹைப்ரிட் பழங்களை ஒரு போதும் ராணி சாப்பிடவே மாட்டார். ஸ்டிராபெர்ரி அவருக்கு மிகப் பிடிக்கும். ஸ்டிராபெர்ரி சீசன் இல்லாத சமயங்களில் கொடுத்தால் தொடக்கூட மாட்டார்.
  • நுரையுடன் இருந்த பால் சேர்த்த டீ ராணிக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். அதிலும் சர்க்கரை சேர்க்காத பிளாக் மற்றும் க்ரீன் டீ தான் அவருடைய சாய்ஸ்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்