மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்! கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு கணவன் மொட்டையடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Mandy Parks என்ற புகைப்பட கலைஞர் கடந்த 20-ஆம் திகதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படம் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை 291k ஷேர், 47k கமெண்ட், 302k லைக்குகளை பெற்றுள்ள இந்த புகைப்படம் இந்தளவிற்கு வைரலாக முக்கிய காரணம், அதில் இருந்த உணர்ச்சிகள்.

Image credits: mandyparksphotography

Charlie என்பவரின் மனைவி Kelsey Johnson மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான சிகிச்சை எடுத்து வருதுடன் அதிலிருந்து மீள்வதற்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் Charlie தன் மனைவிக்கு மொட்டையடித்துவிடுகிறார். பொதுவாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மொட்டையடிக்கப்படுவார்கள், அதன் காரணமாக சார்லி தன் மனைவிக்கு தன் கையாலே மொட்டையடித்துள்ளார்.

Image credits: mandyparksphotography

இதை Mandy Parks புகைப்படமாக எடுத்துள்ளார், அப்போது இந்த ஜோடியில் Kelsey Johnson தன்னுடைய அழகான முடியுடன், பிங்க் நிறத்தில் அழகாக ஒரு ஏஞ்சல் போன்று உடை அணிந்து வர, அவருக்கு எதிரே ஒரு கண்ணாடி இருக்க, அதில் தன்னை பார்க்கிறார் Kelsey Johnson .

அதன் பின் அருகில் இருக்கும் கணவனின் கையை பிடித்துக் கொண்டு அங்கு சற்று நேரம் நடக்கும், அவருக்கு Charlie தன்னுடைய கையால் மொட்டையடித்துவிடுகிறார்.

Image credits: mandyparksphotography

அப்போது அவர் கண்களில் நீர் வடிகிறது. அதை அப்படியே Mandy Parks புகைப்படமாக எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பதிவிட்டு, அதில் Mandy Parks, இந்த அழகான புகைப்படங்கள் எடுப்பதற்கு வாய்ப்பு கொடுத்த Charlie - Kelsey Johnson-க்கு நன்றி, இதிலிருந்த வலி மற்றும் அதில் இருந்த அழகை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் இருவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன், லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார்.

Image credits: mandyparksphotography

Image credits: mandyparksphotography

Image credits: mandyparksphotography

Image credits: mandyparksphotography

Image credits: mandyparksphotography

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்