ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த முகமூடி கொள்ளையர்கள்: போராடி குழந்தையை காப்பாற்றிய தைரிய தாய்: சிசிடிவி காட்சி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் துணிவு மிக்க பெண் ஒருவர் மூன்று முகமூடி கொள்ளையர்களிடம் சண்டையிட்டு தனது குழந்தையை காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

பர்மிங்காம், மோஸ்லி பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த யூலை 26ம் திகதியே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவயிடத்திலிருந்து சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதில். சொகுசு காரில் வரும் பெண் ஒருவர், வாகனம் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்குகிறார். அப்போது, முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், பெண்ணிடம் காரின் சாவியை கேட்டு தாக்குகின்றனர்.

காருக்குள் தனது மூன்று வயது மகன் இருப்பதால், பெண் சாவியை கொடுக்காமல் துணிச்சலுடன் கொள்ளையர்களுடன் மல்லுகட்டுகிறார். இறுதியில் கொள்ளையர்கள் வெறும் கையுடன் தப்பி ஓடுகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்