இளவரசரின் நண்பர் சிறையில் துடி துடிக்க கொல்லப்பட்டார்.. நடந்ததை புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பரும். கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டார் என ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10-ம் திகதி எம்சிசி என்றழைக்கப்படும் நியூயார்க்கின் பெருநகர சீர்திருத்தம் மையத்தில், சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக சிறையில் தடுத்த வைக்கப்பட்டிருந்த இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நண்பர் 66 வயதான எப்ஸ்டீன் தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஸ்பென்சர் குவின் கூறியதாவது, எம்சிசி சிறை மேற்பார்வையாளர் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எப்ஸ்டீன் மரணம் தொடர்பாக பரவும் தகவல்களை நீங்கள் நம்பவேண்டாம் என வலியுறுத்தினார். எப்ஸ்டீன் இருந்த சிறையின் ஒவ்வொரு அங்குலமும் சிசிடிவி கண்காணிப்பில் இருந்தது. எப்ஸ்டீனுக்கு என்ன நடந்தது என்பது கண்டிப்பாக சிசிடிவி கமெராவில் வீடியோவாக பதிவாகி இருக்கும் என கூறினார்.

எம்சிசி-க்குள் பாதுகாப்பு பிரச்சினை குறித்து நான் அவருடன் ஒரு நீண்ட உரையாடலை மேற்கொண்டேன், சிறைச்சாலையின் உட்புறம் குறித்து அவர் எனக்கு ஒரு விரிவான விளக்கத்தை அளித்தார், இது அவர் நம்பகமானவர் என்று நம்புவதற்கு என்னை வழிவகுத்தது.

சிசிடிவி இல்லை என்ற அறிக்கைகள் உண்மை என்றால், அவர்கள் கமெராக்களை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது அவை ஏதோவொரு வகையில் செயல்படவில்லை என்று அர்த்தம். என்ன நடக்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடியாமல் போக வழி இல்லை என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை அதிகாலையில் எப்ஸ்டீன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை சிறையில் எப்ஸ்டீன் உடன் இருந்த நபர் வெளியேற்றப்பட்டுள்ளது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று குவின் குறிப்பிட்டார்.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், உலகின் முக்கிய நபர்களாக திகழும் எப்ஸ்டீனின் நண்பர்கள், அவர்களின் ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக, சிறையில் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து தன்னை கொல்வார்கள் என எப்ஸ்டீன் அஞ்சியதாக குவின் கூறினார்.

மேலும், இது தற்கொலை இல்லை எனில், தற்கொலை போல தோற்றமளிக்க பெரும்பாலும் சிறைச்சாலையின் உள்ளே யாரோ ஒருவருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அதிகாலையில் யாரோ ஒருவர் எப்ஸ்டீன் சிறைக்கு சென்று, அவரின் கழுத்தில் பெட்ஷீட்டால் கட்டி, பெட்ஷீட்டை படுக்கையில் கட்டி அவரை கீழே தள்ளி மூச்சுத் திணற வைத்து கொலை செய்திருப்பார் என சந்தேகிப்பதாக குவின் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்