தனி விமானத்தில் பயணம்... இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதிக்கு அரச வர்ணையாளர் ரோயா நிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இளவரசர் ஹரி, மார்கல் தம்பதி உலகின் காலநிலை மாற்றம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல நாடுகளில் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு அறிவுரை வழங்கி வருகின்றனர். அதே சமயம் தொடர்ந்து தனிவிமானம் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அரச குடும்ப வர்ணையாளர் ரோயா நிக்கா, காலநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு வழங்கிய அறிவுரையை முதலில் அவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர்கள் எப்போதாவது தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்துகிறார்கள். வெஸ்ட்மின்ஸ்டர் இளவரசர் தனது தனியார் ஜெட் விமானத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளார், நான் நினைக்கிறேன்.

ஆனால் பெரிய அளவில், அரச குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் விடுமுறைக்கு வணிக விமானங்களை பயன்படுத்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் அரச குடும்பத்தினர் தங்கள் தனிப்பட்ட பயணங்களில் வணிக ரீதியான விமானத்தில் பயணம் மேற்கொள்வதை நாங்கள் கண்டிருக்கிறோம், ஆனால் தனியார் ஜெட் விமானங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது, குழந்தை இருப்பதால் இளவரசர் ஹரி தனிவிமானத்தை பயன்படுத்துகிறார்.

அரச குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரியமாக குடும்பங்களுடன் பயணம் செய்தால், முதல் வகுப்பின் முழு பகுதியையும் பதிவு செய்யலாம். முதல் வகுப்பில் நீங்கள் மிகவும் தனிப்பட்ட முறையில் பயணிக்க முடியும், நீங்கள் விரைவாக விமான நிலையங்களுக்கு உள்ளே வரவும், வெளியேறவும் வசதி உள்ளது.

உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு உள்ளது, மற்றவர்களைப் போல பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் செல்ல வேண்டியதில்லை. எனவே இவ்வாறான வழிகளிலும் நீங்கள் பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்