பிரபலமானவர்கள் பட்டியலில் மேகனை பின்னுக்குக்குத்தள்ளிய கேட்: முதலிடம் யாருக்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய ராஜ குடும்பத்தவர்களில் மக்களிடையே அதிக பிரபலமானவர் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவர், கடந்த ஆண்டு முதலிடம் பிடித்தவரை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

பின்னுக்குத் தள்ளப்பட்டவர் இளவரசர் ஹரி, அவரைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்தவர் சாட்சாத் பிரித்தானிய மகாராணியாரேதான்!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனை பின்னுக்குத்தள்ளி இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் மேகனுக்கு ஐந்தாம் இடம் கூட கிடைக்கவில்லை.

ஐந்தாம் இடத்தைப் பிடித்தவர் இளவரசர் பிலிப், அதாவது மகாராணியாரின் கணவர். எனவே புதிதாக தாயாகியுள்ள மேகனால் ஆறாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்துள்ளது.

கடந்த முறை முதலிடத்தைப் பிடித்த ஹரி, இம்முறை 71 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டாலும், அவரது அண்ணன் வில்லியமை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

ஹரியின் அண்ணன் வில்லியம் 69 சதவிகித வாக்குகளுடன் தனது தம்பியை விட பின்தங்கியுள்ளார்.

வில்லியமுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ள நிலையில், ஹரியின் மனைவி மேகனைத் தொடர்ந்து வருபவர் இளவரசர் சார்லஸ்.

இளவரசர் சார்லஸ் ஏழாவது இடத்தைப் பிடிக்க, அவரது மனைவி கமீலாவால் முதல் பத்து இடங்களுக்குள் வரமுடியவில்லை, அவருக்கு 11ஆவது இடம்தான் கிடைத்தது. எல்லாவாற்றிற்கும் மேல், கடைசி இடங்களை பிடித்தவர்கள்... இளவரசி பீட்ரைசும் அவரது தந்தை இளவரசர் ஆண்ட்ரூவும்தான்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்