சட்டையை வைத்து மறைத்துக் கொண்டு பெண்கள் இருவர் செய்த மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள துணிக்கடை ஒன்றில் சட்டையை வைத்து மறைத்துக் கொண்டு பிக் பாக்கெட் அடித்த இரண்டு பெண்கள் பொலிசாரிடம் சிக்கினார்கள்.

பல்கேரியாவைச் சேர்ந்த Sofiya Ivanova(23) மற்றும் Totka Dimitrova (48) ஆகிய இரண்டு பெண்கள் தங்களை சாதாரண உடையில் இருக்கும் பொலிசார் பின் தொடர்வது தெரியாமல் மத்திய லண்டனிலுள்ள துணிக்கடை ஒன்றிற்குள் நுழைந்துள்ளார்கள்.

கைப்பை வைத்திருக்கும் பெண்களுக்கு அருகில் செல்லும் இந்த பெண்கள், சட்டை வாங்குவதுபோல், கையில் ஒரு சட்டையை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சட்டையால் அந்த பெண்களின் பை வெளியே தெரியாதவாறு மறைத்தவாறு அதிலிருப்பவற்றை திருட முயல்கிறார்கள்.

பத்து நிமிடங்களுக்குள், அந்த இருவரும் நான்கு வாடிக்கையாளர்களிடம் திருட முயல்வதை வெளியாகியுள்ள CCTVகமெரா காட்சிகளில் காண முடிகிறது. சாதாரண உடையில் அவர்கள் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த பொலிசார், அந்த இருவரையும் கைது செய்தார்கள்.

தற்போது எட்மண்டனில் வசிக்கும் Ivanova மற்றும் Dimitrova ஆகிய இருவருக்கும் 18 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, 122 பவுண்டுகள் இழப்பீடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் இருவரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்