இரண்டு தமிழர்கள் உட்பட 24 இந்தியர்களையும் விடுதலை செய்த பிரித்தானியா!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியா சிறைப்பிடித்த ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த 2 தமிழர்கள் உட்பட 24 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவுக்கு பெட்ரோலிய எண்ணெயை ஈரான் கப்பல் கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டிய பிரித்தானிய அரசு, கிரேஸ்-1 என்ற எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது. அந்த கப்பலில் இரண்டு தமிழர்கள் உட்பட 24 இந்தியர்கள் இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தியர்களை விடுதலை செய்ய இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக, குறித்த 24 இந்தியர்களையும் விடுவிக்க பிரித்தானியா ஒப்புக்கொண்டது.

முன்னதாக, சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கக்கூடாது என்று Gibraltar நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஈரான் எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, கப்பலில் இருந்த 24 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நவீன் என்பவர் தமிழகத்தின் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். பாலாஜி என்ற தமிழர் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர்களது உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்