காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து லண்டனில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
அம்மாநில மக்களிடம் பொதுவாக்கெடுப்பு அல்லது கருத்துக்கணிப்பு கேட்காமலே மத்திய அரசு எடுத்து இந்த நடவடிக்கைக்கு சமூக அமைப்புகளை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக தமிழகத்திலிருந்து தான் அதிகமான எதிர்கருத்துக்கள் வெளிவந்தன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழ் அமைப்புகள் பலவும் மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் லண்டனில் பர்மிங்காமிலுள்ள இந்தியா துணை தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் வெளிநாட்டை சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்துளளனர்.
இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் சீக்கிய மக்கள் சார்பில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 'தமிழ் சொலிடாரிட்டி' உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்றிருந்துள்ளன.