பிஞ்சுகுழந்தையிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பாதிரியார்: பதறிப்போன தாய்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ரஷ்யாவில் பெயர் சூட்டும் விழாவின் போது பாதிரியார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை பார்த்து குழந்தையின் தாய் பதறிபோயுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகில் கச்சினாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று ஞானஸ்நான நிகழ்வு நடந்தது.

இந்த விழாவின் போது ஃபோட்டி நெச்செபோரென்கோ என்கிற பாதிரியார் ஒருவயதான குழந்தையின் ஆடையை களைந்து நிர்வாணமாக நீரில் மூழ்கடித்து எடுத்தார். அந்த குழந்தை பயந்துபோய் அழ ஆரம்பித்தது. அந்த சமயத்திலும் கூட பாதிரியார் தொடர்ந்து அதனை செய்துகொண்டே இருந்தார்.

முரட்டுத்தனமாக அவர் ஞானஸ்நானம் கொடுப்பதை பார்த்து பதறிப்போன குழந்தையின் தாய் அனஸ்தேசியா அலெக்சீவா (24), வேகமாக ஓடிச்சென்று, குழந்தையை பறிக்க முற்பட்டார்.

ஆனால் அந்த பாதிரியார் குழந்தையை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தால் தற்போது குழந்தையின் தோள்பட்டை மற்றும் கழுத்தில் கீறல்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம் நடந்ததிலிருந்தே குழந்தை எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டு, பயந்துபோய் இருப்பதாக அலெக்சீவா கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாதிரியார் மீது குற்றம் இருப்பதாக தேவாலயம் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் அவரை ஒருவருடம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்