பக்கிங்காம் அரண்மனைக்கு அருகே நடந்த கோரவிபத்து: பதைபதைக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பக்கிங்காம் அரண்மனைக்கு அருகே நேற்று நடத்த விபத்தில் இரண்டு கார்களுக்கு நடுவில் சிக்கி காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று இரவு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சில அடி தூரத்திலே உள்ள சாலையில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில், 40 வயதுடைய பெண் ஒருவர் இரண்டு கார்களுக்கு இடையில் சிக்கிகொண்டார். இதனை பார்த்ததும் அங்கு குவிந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்பதற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை குறித்து பொலிஸார் எந்த தகவலும் வெளியிடவில்லை.

அதேசமயம் விபத்து ஏற்படுத்தியதாக கருப்பு காரை ஓட்டிவந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றொரு காரை ஒட்டி வந்த நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட பெண் விபத்தில் சிக்கிய மற்றொரு காரின் உரிமையாளர் எனவும், அவர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனருடன் சண்டையில் ஈடுபட்டதாலே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers