ஆளத்தெரியாத அரசியல்வாதிகள்: பிரித்தானிய மகாராணியார் கடுமையான விமர்சனம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குழப்பங்கள் நிலவும் அரசியல் சூழலுக்குள் மகாராணியாரையும் இழுக்கும் அச்சுறுத்தல் நிலவுவதையடுத்து, பிரித்தானிய அரசியல்வாதிகள் ஆளத்தெரியாத அரசியல்வாதிகள் என மகாராணியார் கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது 67 ஆண்டு ஆட்சிக்காலத்தில் மகாராணியார் இப்படி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது மிகவும் அபூர்வமாகும்.

தனது நீண்ட கால அரியணை வாழ்வில் பெரும்பாலும் மகாராணியார் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிட் பிரச்சினை, மகாராணியாரை அரசியல் பிரச்சினைகளுக்குள் உள்ளிழுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து மகாராணியாரின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், அவர் தோற்கும் பட்சத்தில், ஜெரமி கார்பின் மகாராணியாரிடம் சென்று, நாங்கள் பிரதமர் பொறுப்பை ஜான்சனிடமிருந்து எடுத்துக் கொள்கிறோம் என்று கூற வேண்டும் என லேபர் கட்சியைச் சார்ந்த ஜான் மெக்டானல் அறிவித்திருந்தார்.

ஜான்சன், அக்டோபர் 31 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நிச்சயம் வெளியேறும், ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் சரி செய்யப்படாவிட்டாலும் சரி என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஸ்காட்லாந்தில் சுதந்திரம் தொடர்பான வாக்கெடுப்புக்கு வழி வகுப்பதோடு, அயர்லாந்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதால், பிரித்தானியா பிரிந்துபோகும் ஒரு பெரும் அபாயம் உள்ளது.

இதனால்தான் மகாராணியார் அரசியல் சூழலை சரியாக கையாளத்தெரியாத அரசியல்வாதிகளை, ஆளத்தெரியாத அரசியல்வாதிகள் என விமர்சித்துள்ளார்.

இது இப்படியிருக்க, இன்னொருபக்கம், வாக்கெடுப்பில் ஜான்சன் தோற்றாலும், அக்டோபர் 31க்கு பிறகு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்றும், அதனால் அதிகாரமற்றுப்போகும் நிலைமைக்கு உள்ளாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேறுவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்