சீரழியும் லண்டன் நகரம்: பிரித்தானியாவின் மிக மோசமான பகுதிகள் எவை தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஒட்டுமொத்த இங்கிலாந்தில் பாலியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் புழங்கும் பகுதியாக லண்டன் மாநகரம் இருப்பதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான ஆய்வு ஒன்றில், ஒட்டுமொத்த இங்கிலாந்தில் லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் நகரங்கள் இரண்டுமே பாலியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என தெரியவந்துள்ளது.

லண்டனின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த காரணங்களாலையே இங்கு பாலியல் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லண்டனில் மட்டும் 100,000 பேரில் சுமார் 4,615 பேருக்கு பாலியல் நோய் பாதிப்பு இருப்பதாகவும், இது வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் 2,694 என இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய நகரங்களுக்கு வெளியேயும் பாலியல் நோய் பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களின் எண்ணிக்கை அதிரவைப்பதாக உள்ளது.

பிரைட்டன் நகரில் ஒவ்வொரு 100,000 பேரில் 1,547 பேர் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எனவும் மான்செஸ்டர் நகரில் இது 1,411 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

ஒட்டுமொத்த இங்கிலாந்தில் பாலியல் தொடர்பான நோய் பாதிப்புகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய சராசரியானது 1,000 பேருக்கு 8.5 எண்ணிக்கையாகும். லண்டனில் உள்ள 32 நகரங்களில் 15 பாலியல் நோய் தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்த லண்டனில் 1,000-ல் 17.1 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பேரதிர்ச்சியான தகவல், பல்கலைக்கழக மாணவர்களே பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளானதாக இந்த ஆய்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

பாலியல் நோய் பாதிப்புக்கு உள்ளான முதல் 20 நகரங்களில் நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பர்மிங்காம், லீட்ஸ், மான்செஸ்டர், லிவர்பூல், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

லண்டனை விடுத்து பாலியல் நோய் பாதிப்பு மிக அதிகம் காணப்படும் பகுதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, வட மேற்கு, அதைத் தொடர்ந்து தென்கிழக்கு, மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகளாகும்.

இதில் கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் கிழக்கு பகுதி பாலியல் நோய் பாதிப்பு மிக குறைவு என தெரியவந்துள்ளது.

பாதிப்புக்கு உள்ளான இங்கிலாந்தின் முதல் 10 நகரங்கள்:

 1. Brighton - 1,547
 2. Manchester - 1,411
 3. Blackpool - 1,245
 4. Salford - 1,237
 5. Southampton - 1,227
 6. Bristol - 1,147
 7. Reading - 1,137
 8. Liverpool - 1,123
 9. Portsmouth - 1,099
 10. Nottingham - 1,003

லண்டனில் பாதிப்புக்கு உள்ளான 10 பகுதிகள்:

 1. City of London 4,615
 2. Lambeth - 3,823
 3. Hackney - 3,122
 4. Southwark - 3,110
 5. Westminster - 2,694
 6. Hammersmith and Fulham - 2,521
 7. Tower Hamlets - 2,467
 8. Islington - 2,406
 9. Kensington and Chelsea - 2,278
 10. Wandsworth - 2,195

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்