நடுக்காட்டில் பாசப்போராட்டம் நடத்தும் பிரித்தானிய தாய்! கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மலேசியாவில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக காணாமல் போன பிரித்தானிய சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளைத் தேடும் மீட்புக் குழுக்களுக்கு உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்துள்ளனர்.

லண்டனில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் மீப் மற்றும் செபாஸ்டியன் குய்ரின் தம்பதியினரின் 15 வயது மகள் நோரா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அறையிலிருந்து மாயமாகினார்.

அவரை வான்வழித் தேடுதல், மோப்ப நாய்கள், அந்தப் பகுதியை நன்கு அறிந்த பூர்வக்குடியினர் என 200க்கும் அதிகமானோர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாக பேசிய நோராவின் தாய் மீப், 'உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். நோராவுக்காக நீங்கள் இரவும் பகலும் தேடுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதை நாங்கள் காண்கிறோம். மேலும் எங்களுடன் சேர்ந்து பிராத்தனை செய்கிறீர்கள். பக்ரீத் பண்டிகை இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் நிலையில் கூட நீங்கள் உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவிடுகிறீர்கள்.

'நீங்கள் இங்கே எங்களுடன் இருப்பது, உலகமே இருப்பதாக அர்த்தம். எங்களுக்காக நீங்கள் செய்கிற எல்லாவற்றிற்கும், இங்கிருந்து உதவி செய்பவர்களுக்கும், இங்கு இல்லாவிட்டாலும் வெளியில் இருந்து உதவி செய்பவர்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

உங்கள் முயற்சி, நிபுணத்துவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம், நீங்கள் நோராவைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் எனப்பேசியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்