இவள் தீவிரவாதி! லண்டனில் இந்திய சிறுமி மீது இனவெறி தாக்குதல்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

டர்பன் அணிந்திருந்ததால் இந்திய சிறுமியை தீவிரவாதி என கூறி சிறுவர்கள் விளையாட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் குர்பிரீத் சிங் என்பவர் வசித்து வருகிறார், இவரது மகள் முன்ஷிமர் கவுர், 10 வயதாகும் இவள் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியுள்ள முன்ஷிமர் கவுர், கடந்த திங்களன்று பூங்காவுக்கு சென்றேன், அங்கே நால்வர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

நான் விளையாட வரலாமா என்று கேட்டேன், அவர்கள் நீ தீவிரவாதி, எங்களுடன் விளையாடக்கூடாது என சத்தமாக கூறினர்.

அதிர்ச்சியில் உறைந்த நான் அப்படியே சென்றுவிட்டேன், மறுநாளும் அதே தான் நடந்தது, டர்பன் அணிந்திருப்பதால் இவ்வாறு செய்கிறார்கள், நாங்கள் அனைவரையும் நேசிக்கிறோம் என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்த குர்பிரீத் சிங், இன்று என் மகளுக்கு நடந்தது, நாளை உங்கள் மகள்களுக்கும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்