பிரித்தானியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூடன் விமான நிலையத்தில் ஈஸிஜெட் விமான நிறுவனத்திற்கு செந்தமான EZY017 விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. லூடனில் இருந்து எடின்பர்க் செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிய நிலையில் திடீரென விமானத்தின் உச்சவரம்பில் இருந்து புகை வெளியேறி விமானத்திற்குள் சூழ்ந்தள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட விமானக்குழுவினர் பயணிகளை விமானத்தை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டள்ளனர்.
தகவலறிந்த சில நிமிடங்களில் தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். பத்திரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள் மற்றொரு விமானத்தில் பயணம் மேற்கொண்டதாக ஈஸிஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
We were sitting on an #easyjet at #lutonairport when that rain hit...and then our plane started smoking pic.twitter.com/3fR9ctdYJQ
— Evan Hood (@EvanOH) August 9, 2019
தாமதம் மற்றும் சிதமத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம், மழை நீர் விமானத்திற்குள் புகுந்ததால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.