சிலை போன்று உருமாறி வரும் பிரித்தானிய பெண்மணி: விசித்திர நோயால் அவதி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 35 வயது பெண்மணி ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சிலையாக உருமாறி வருகிறார்.

மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் விசித்திர நோயால் தாக்கப்பட்டுள்ளார், ரோச்ச்டேல் பகுதியை சேர்ந்த 35 வயதான ரேச்சல் வின்னார்ட்.

இதனால் தற்போது இவரது மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்வது இவரின் கணவரே. இவரால் இவரது கழுத்தை, கைகளை, கால்களை எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த விசித்திர நோய் தாக்குதல் காரணமாக இவர் தற்போது வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளார். தம்மை சுற்றியிருப்பவர்களுக்கு தாம் ஒரு சுமையாக கருதுவதாக ரேச்சல் கண்கலங்கியுள்ளார்.

தமது நிலை குறித்து பலருக்கும் விளக்கம் அளித்தாலும், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல், என்னை பரிதாபமாக பார்ப்பதையே வாடிக்கையாக செய்கின்றனர் என்றார்.

19 மாத குழந்தையாக இருக்கும்போது முதன் முறையாக ரேச்சலின் முதுகில் கட்டிகள் இருப்பது தொடர்பில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதை புற்றுநோய் என கருதிய மருத்துவர்கள் அதர்கான சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் அந்த கட்டி குண்மாகவில்லை.

காலில் ஒரு எலும்பு இல்லை என்பதை அறிந்த பின்னரே அது புற்றுநோய் அல்ல என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

12 ஆம் வயதில் இந்த நோய் தொடர்பில் அடையாளம் காணப்பட்டாலும் ரேச்சலின் 20 ஆம் வயதிலேயே நோயின் தாக்கம் வெளியே தெரிந்துள்ளது. இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரேச்சலின் இடது பக்க இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

அதில் இருந்து தொடர்ந்து படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார் ரேச்சல். தற்போது அவருக்கு 24 மணி நேரமும் கவனம் தேவைப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு கருவுற்ற ரேச்சலுக்கு, அந்த குழந்தை தங்கவில்லை எனவும், இதே நிலையில் பிள்ளை பெற்றுக் கொள்வது ஆபத்தானது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...