இஸ்லாமிய பெண்கள் போல் உடையணிந்து திருடிய இளம்பெண்கள் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளம்பெண்கள் இருவர் இஸ்லாமிய பெண்கள் போல் உடையணிந்து திருடி பிடிபட்ட நிலையில், அவர்களில் ஒரு பெண் மோசமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லண்டனிலுள்ள Asda சூப்பர்மார்க்கெட் ஒன்றில், பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்கள் பொருட்களை திருடி தங்கள் பர்தாவுக்குள் மறைக்கும்போது கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் சூப்பர்மார்க்கெட் ஊழியர்கள் அந்த பெண்களை சூழ்ந்து நிற்க, அந்த பெண்கள் மறைத்து வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து கீழே போடுகின்றனர்.

பால் பவுடர் உட்பட, சுமார் 20 பொருட்களை அவர்கள் திருடி மறைத்து வைத்துள்ளார்கள்.

இவ்வளவையும் செய்துவிட்டு, அவர்களில் ஒரு பெண் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னிடம் வேறு எதுவும் இல்லை என்று காட்டுவதற்காக, சட்டென அந்த பெண் உள்ளாடை தெரியுமளவுக்கு தனது உடையை தூக்கிக் காட்டி விட்டார்.

எதிர்பாராத அந்த நிகழ்வால் அதிர்ந்துபோன சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், சட்டென தங்கள் கைகளால் கண்களை மறைத்துக் கொண்டு, அங்கிருந்து அகன்று விட்டனர்.

அந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர், நீ இஸ்லாமியர் அல்ல என்று கத்துவதைக் கேட்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ள பலரும், அந்த பெண்கள் நிச்சயம் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது, திருடுவதற்காக அவர்கள் பர்தா அணிந்து வந்திருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Victoria Roycroft என்ற பெண், இது முற்றிலும் அருவருப்பான செயல் என்று கூறியுள்ளார்.

Mell Horn என்பவர், நிச்சயம் எந்த இஸ்லாமிய பெண்ணும், அதுவும் ஆண்கள் இருக்கும்போது, இப்படி மோசமான செயலில் ஈடுபட மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் அந்த வீடியோ வைரலாக பரவினாலும், அந்த சூப்பர் மார்க்கெட் அந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்காததால், பொலிசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை, கருத்து தெரிவிக்கவும் இல்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்