வெள்ளத்தில் மூழ்கும் பிரித்தானியா தலைநகர்..! அபாயமான சூழலில் லண்டன்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தேம்ஸ் நதியில் நீர் மட்டத்தை ஒழுங்குபடுத்தும் தேம்ஸ் பேரியரை இயக்கும் ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

தேம்ஸ் பேரியர் ஊழியர்கள் செப்டம்பர் 2 முதல் 8 வரை மற்றும் செப்டம்பர் 23 முதல் 29 வரை குறைந்த ஊதியம் தொடர்பாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

தேம்ஸ் பேரியர் வேலைநிறுத்தம் மத்திய லண்டனில் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது, வேலை நிறுத்த நேரத்தில் அலை அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த மாதத்தில் அலைகள் மிக உயர்ந்ததாக இருக்கும் போது வேலைநிறுத்தம் செய்தால் மத்திய லண்டனில் 30 அடி வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ட்மின்ஸ்டர், ஓ2 அரினா, டவர் பிரிட்ஜ் மற்றும் தேம்ஸ் நதியின் அருகிலுள்ள பகுதிகளான ஐல் ஆஃப் டாக்ஸ், சவுத்வாக், வைட் சேப்பல் மற்றும் வெஸ்ட் ஹாம் போன்ற இடங்களில் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேம்ஸ் பேரியர் பொறியாளர்கள், ஊழியர்கள் உட்பட சுமார் 3,000 க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் முகமை ஊழியர்கள் தற்போதைய வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்கேற்க உள்ளனர்.

சுற்றுச்சூழல் முகமை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வெள்ள அபாயத்திலிருந்து லண்டனைப் பாதுகாக்க தேம்ஸ் பேரியர் தொடர்ந்து செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்த வலுவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்