டயானாவிடம் கற்றுக்கொண்ட பாடத்தால் மேகனிடம் நெருக்கம் காட்டும் ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ராணி, வழக்கத்திற்கு மாறான ஒரு நட்புணர்வை மேகனுடன் ஏற்படுத்தியிருப்பதாக ஒரு அரச வர்ணனையாளர் தெரிவித்துள்ளார்.

அரச வர்ணனையாளர் டங்கன் லார்கோம்பின் கூற்றுப்படி, அமெரிக்க நடிகை மேகன் இளவரசர் ஹரியை திருமணம் செய்தது முதலே, மற்ற யாரிடமும் இல்லாத அளவிற்கு ஒரு நெருக்கமான நட்புணர்வை ஏற்படுத்த ராணி முயற்சி செய்துள்ளார்.

இது இளவரசி 'கேட்டிற்கு கொடுக்கப்படாத ஒரு முயற்சி', ஏனெனில் அவர் அரச குடும்பத்தில் நுழைவது படிப்படியாக இருந்தது. ஆனால் மேகன் அப்படி இல்லை. திடீரென அரச குடும்பத்தில் நுழைந்ததால், அவர் ஒரு வெளிக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பது போல் உணர்ந்து விடக்கூடாது என்பதாலே அத்தகைய நட்புணர்வை ஏற்படுத்தி கொண்டார்.

கடந்த காலத்தில் இளவரசி டயானா அரச குடும்பத்தில் இருந்து சற்று விலகி வெளிக்குடும்பத்தாரை போலவே உணர்ந்தார். அவரிடம் இருந்து கற்ற பாடத்தாலே, மேகனும் அப்படி உணர்ந்துவிட கூடாது என்கிற அக்கறையில் ராணி இப்படி பாசம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்