லட்சக்கணக்கான பிரித்தானியர்களுக்கு சிக்கல்..! கசிந்தது முக்கிய ரகசிய தகவல்கள்

Report Print Basu in பிரித்தானியா

மோன்ஸோ வங்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் நடந்த பெரிய பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து 4,80,000 பிரித்தானியா வாடிக்கையாளர்களுக்கு தங்களின் PIN நம்பர் எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமான தகவல்கள் அங்கீகரிக்கப்படாத ஊழியரால் வெளியிடப்பட்ட நிலையில், இதனால், கிட்டத்தட்ட அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மோன்ஸோ வங்கி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பிரச்சினையை நாங்கள் சரி செய்துவிட்டோம், எனினும், சில வாடிக்கையாளர்களின் PIN நம்பர் சரி செய்ய முடியவில்லை

ஆகஸ்ட் 2ம் திகதி இப்பிரச்னையை நாங்கள் கண்டறிந்தோம், தவறாக சேமித்து வைக்கப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டது. நாங்கள் பிழையைக் கண்டறிந்தவுடன், மோன்சோவில் உள்ள எவருக்கும் தகவல்களை அணுக முடியாது என்பதை உறுதிப்படுத்த உடனடியாக மாற்றங்களைச் செய்தோம்.

வங்கியின் 2.6 மில்லியன் வாடிக்கையாளர்களில் சுமார் 480,000 பிரித்தானியா வாடிக்கையாளர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கணக்குகளையும் நாங்கள் முழுமையாக சரிபார்த்துள்ளோம், மேலும் மோசடி செய்ய தகவல் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு அவர்கள் பின் நம்பரை மாற்ற வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தியது என வங்கி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்