பிரித்தானியாவில் தன்னுடைய பெயரால் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவிக்கும் நபர்.. அப்படியென்ன பெயர் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது பெயரை சில வருடங்களுக்கு முன்னர் மாற்றி கொண்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு காரணம் அவரின் பெயர் தான் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் Kenny.இவர் கடந்த 2016-ல் தனது பெயருக்கு பின்னால் Fu-Kennard என சேர்த்து கொண்டார்.

இது பிற்காலத்தில் அவருக்கு மிக பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.

அதாவது Fu-Kennard என்ற பெயர் இருப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க உள்துறை அலுவலகம் மறுத்துள்ளது. அந்த பெயரை ஆபத்தான பெயராக அலுவலகம் பார்ப்பதாலேயே பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.

அவரின் பழைய பாஸ்போர்ட்டும் காலாவதி ஆகிவிட்டதால் பிரித்தானியாவை விட்டு வெளியே செல்லமுடியாமல் Kenny தவித்து வருகிறார்.

இது குறித்து Kenny கூறுகையில், இது தொடர்பாக என் தொகுதி எம்பிக்கு கடிதம் எழுதினேன், ஆனால் உள்துறை அலுவலகத்துக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளதாக அவர் கூறிவிட்டார்.

என்னிடம் இப்போது பாஸ்போர்ட் இல்லை, என் சொந்த நாட்டிலே கைதியாக சிறையில் இருப்பது போல உணர்கிறேன்.

இனவெறி அல்லது வெறுப்பை தூண்டுகிற பெயர்களை ஏற்பதில்லை என உள்துறை அலுவலகம் கூறுகிறது, இதை நான் ஏற்கிறேன். ஆனால் என்னுடைய Fu-Kennard பெயர் அவமதிப்பானதோ, பிரச்சனையை ஏற்படுத்தும் பெயரோ கிடையாது.

என்னுடைய 16 வயதில் Coco Kenny என என் பெயரை மாற்றி கொண்டேன், ஆனால் ராணுவத்தில் சேர்ந்த எனக்கு அந்த பெயர் சிறுபிள்ளைதனமாக இருப்பதாக கூறப்பட்டதால் வேறு மாற்றி கொண்டேன்.

மீண்டும் என்னால் இந்த பெயரை மாற்றி கொள்ள முடியாது.

Kenny Fu-Kennard என்ற பெயரில் தான் எனக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது, ஆனால் பாஸ்போர்ட் வழங்க மட்டும் மறுக்கிறார்கள்.

இதே பெயரில் பாஸ்போர்ட்டை பெற வேறு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்