சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த பெண்: அவருடைய பாதி உடல் மட்டுமே கணவனுக்கு திரும்ப கிடைத்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி டொமினிக்கன் குடியரசு என்ற நாட்டுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த இடத்தில், அந்த பெண் திடீரென உயிரிழக்க, அவரது கணவனுக்கு அந்த பெண்ணின் பாதி உடல் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்ட பரிதாப சம்பவம் நிகழந்துள்ளது.

எஸ்ஸெக்சை சேர்ந்த Peter Crouch தனது மனைவி Lynneயுடன் டொமினிக்கன் குடியரசு என்ற நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக Lynne கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், தனது பிறந்த நாள் அன்று உயிரிழந்தார் Lynne.

கடுமையான ஏமாற்றத்துடனும், தாங்கொணா துயரத்துடனும் Peter நாடு திரும்ப, அவரது மனைவியின் உடல் உடற்கூறு பரிசோதனைக்குப்பின் பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டது.

பிரித்தானிய மருத்துவர்கள் மீண்டும் Lynneயின் உடலை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது Peterக்கு பயங்கர அதிர்ச்சிகள் காத்திருந்தன.

முதலாவது, Lynneக்கு மூளைக்காய்ச்சலே இல்லை என்று தெரியவந்தது. இரண்டாவது, டொமினிக்கன் குடியரசிலிருந்து அனுப்பப்பட்டிருந்த Lynneயின் உடலில் பல உறுப்புகள் இல்லை.

அவரது கண்கள், இதயம், இரைப்பை மற்றும் ஆறு உறுப்புகள் அவரது உடலிலிருந்து அகற்றப்பட்டிருந்தது தெரியவரவே, இடிந்து போய் உட்கார்ந்து விட்டார் Peter.

தனது மனைவியின் உடலை முறைப்படி நல்லடக்கம் செய்த Peter, என் மனைவியின் பாதி உடலைத்தான் அடக்கம் செய்ய முடிந்தது என்கிறார் கண்ணீருடன்.

பின்னர் தனது மனைவியின் உடல் உறுப்புகளை திரும்பப் பெற ஐந்து மாதங்கள் போராடிய நிலையில், தம்பதியின் திருமண நினைவு நாள் அன்று, சில உறுப்புகள் டொமினிக்கன் குடியரசிலிருந்து அனுப்பப்பட்டன.

ஆனால், அவை என் மனைவியுடையவை அல்ல என்கிறார் Peter.

தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் அவை திருடப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார் அவர்.

நீண்ட நாட்கள் தன மனைவியின் உடல் உறுப்புகளுக்காக போராடியதால், யாரோ ஒருவரில் உடல் உறுப்புகளை தற்போது அனுப்பியிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

டொமினிக்கன் குடியரசிலிருந்து Peterஇன் மனைவியின் உடல் உறுப்புகள் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள உறுப்புகளுக்கு, பிரித்தானியாவில் DNA சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னர்தான் உண்மையான நிலவரம் தெரியவரும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers