பிரித்தானியா மக்களுக்கு முக்கிய அறிவிப்பு... வெள்ள எச்சரிக்கை: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமான மழை பெய்யும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இந்த வாரம் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக இந்த கனமழை காரணமாக Derbyshire பகுதியில் இருக்கும் Goyt ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அதே போன்று Whaley Bridge dam-லும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே Whaley Bridge dam அருகே இருக்கும் மக்கள் சுமார் 1500- பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் அங்கிருக்கும் சிலர் வெளியேற மறுத்து வருவதால், அதிகாரிகள் அவர்களிடம் உங்கள் வாழ்க்கையை நீங்களே ஆபத்தில் கொண்டு போய் முடித்துவிடாதீர்கள் என்று கூறி, அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதியில் இன்று இடி விழுகும் எனவும், அங்கு வெப்ப நிலை 24C-தான் இருக்கும், அதே போன்று பிரித்தானியாவில் நாளை பல இடங்களில் புயலின் தாக்கமும் இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதன் கிழமை பிற்பகல் வரை ஸ்காட்லாந்தில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆனால் அதே நாள் வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் சூரியன் தென்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழாக்கிழமை வழக்கமான நாளாக மாறினாலும், வெள்ளிக்கிழமை மீண்டும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுற்றுச்சூழல் குறிப்பாக 13 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. எந்தெந்த இடங்கள் தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்