போதையில் உளறிய நபர்: கணவரின் நண்பனின் குழந்தைக்கு தாயான பெண்! அவர்களின் தற்போதைய நிலை?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

போதையில் இருருக்கும்போது, தனது மனைவியால் இனி ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்றும், ஆனால் தங்களுக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என ஆசை என்றும், தனது நண்பரிடம் தனது மனக்குறையை ஒருவர் கொட்டித் தீர்க்க, கணவரின் நண்பரின் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார் ஒரு பெண்.

Warringtonஐச் சேர்ந்த Kelly Bullock (33) அவரது கணவர் Paul (35) இருவருக்கும், இனி Kellyயால் ஒரு குழந்தையை சுமக்க முடியாது என்ற செய்தி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

முதல் குழந்தை பிறந்தபோதே 22 வாரங்கள் சக்கர நாற்காலியில் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், இன்னொரு முறை Kelly கர்ப்பமுற்றால், அவர் நிரந்தரமாக சக்கர நாற்காலியிலேயே தனது காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.

ஒரு நாள் தனது நண்பரான Marc Bott (35)உடன் மதுபான விடுதிக்கு சென்றிருந்தபோது, போதையில் தனது மனக்குறையைக் கொட்டி கண்ணீர் விட்டிருக்கிறார் Paul.

அதைக்கேட்டு வருந்திய Marc, வீட்டுக்கு வந்ததும் நடந்ததை தன் மனைவியாகிய Kim (32)இடம் கூறி வருந்தியிருக்கிறார்.

பின்னர் ஒருநாள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள Kellyயும் Paulம் முடிவு செய்திருப்பதாக Marc கூற, நானே வாடகைத்தாயாக இருக்கிறேனே என்றிருக்கிறார் Kim.

வேடிக்கைக்காக சொல்வது போல் பேசி சிரித்துக் கொண்டாலும், பின்னர் சீரியஸாக கூகுளில் தகவல்கள் திரட்டியிருக்கிறார் Kim.

பின்னர் இன்னொருமுறை நண்பர்கள் இந்த விடயத்தை பேசிக்கொள்ளும்போது, தங்கள் முடிவை Paulஇடம் தெரிவித்திருக்கிறார் Marc.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள் Kellyயும் Paulம். ஆனால் விடயம் எதிர்பார்த்ததுபோல் எளிதாக இல்லை.

இரண்டு முறை முயன்று, இரண்டும் தோல்வியில் முடிந்திருக்கிறது. மூன்றாவது முயற்சியில் கருவுற்ற Kim, தன் கணவரின் நீண்ட கால நண்பரின் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்திருக்கிறார்.

இரண்டும் பெண் குழந்தைகளாக இருக்கும் நிலையில், தன் மனைவி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தது சற்று ஆசையைத் தூண்டினாலும், அது தன் குழந்தையில்லை, தன் நண்பனின் குழந்தை என்ற எண்ணத்தை மனதில் ஆழப் பதியச் செய்து விட்டதால் தனக்கு அவ்வளவு வருத்தமில்லை என்கிறார் Marc.

சில நேரங்களில் Kimக்கு குழந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. என்றாலும் இப்போது இரண்டு குடும்பங்களும் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இரண்டு ஜோடிகளின் குழந்தைகளும், சொந்த சகோதர சகோதரிகள் போல் வாழ்கிறார்கள்.

எல்லாரைவிடவும் Kellyக்குதான் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தனக்கு இரண்டாவது குழந்தை கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, தனக்காக Marc, Kim ஜோடி செய்த உதவியை சொல்லி மாளவில்லை அவருக்கு. Kim என் தேவதை என்று வாய் நிறைய சொல்கிறார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்