இளவரசர் ஹாரியின் அப்பா ஜேம்ஸ் ஹெவிட்டா? ஆதாரத்தை வெளியிட்ட முடி நிபுணர்கள்

Report Print Basu in பிரித்தானியா

இளவரசர் ஹாரியின் அப்பா ஜேம்ஸ் ஹெவிட் என கூறப்படும் கூற்றுக்கு இறுதியாக முடிவு கட்டப்பட்டுள்ளது.

இளவரசி டயனாவின் காதலரான ராணுவ தளபதி ஜேம்ஸ் ஹெவிட் தான் இளவரசர் ஹாரியின் தந்தை என அசாதாரணமான கருத்துக்கள் பரவி வந்தன. காரணம் இருவருக்கும் இஞ்சி நிற முடி இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இளவரசி டயானவின் குடும்ப உறுப்பினரின் சாயலில் தான் ஹாரியின் முடி நிறம் இருக்கிறது எனவும், சார்லஸ் நிச்சயமாக ஹாரியின் அப்பா என்பதை நிரூபிக்கும் படங்களும் வெளிப்படுத்தப்பட்டது.

ஹாரி பிறந்த பிறகு கூட. ராணுவ தளபதி ஹெவிட்டை டயானா சந்திக்கவில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

ஆனால், இப்போது முடி உதிர்தல் ஆலோசகர்களான ஸ்பென்சர் ஸ்டீவன்சன், ஹாரி மற்றும் ஹெவிட்டின் முடி குறித்து ஆராய்ந்து முடித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

ஹாரி மற்றும் ஹெவிட் முற்றிலும் மாறுபட்ட முடி உதிர்தல் வடிவங்களைக் கொண்டிருப்பதை விவரித்தார். ஹாரிக்கு உச்சந்தலையில் இருந்து முடி உதிர்வதும் மற்றும் ஹெவிட்டுக்கு முன்னால் இருந்து முடி உதிர்வதை அவர் குறிப்பிட்டார்.

அடுத்து இரண்டு ஆண்டுகளில் ஹாரிக்கு வழுக்கை வரக்கூடும், அதே நேரத்தில் ஹெவிட் 61 வயதில் இன்னும் முழு அளவிலான தலைமுடியைக் கொண்டிருக்கிறார்.

ஹாரியின் முடி உதிர்தல் முறை மற்றும் ஜேம்ஸ் ஹெவிட் முடி உதிர்தல் முறை மிகவும் வித்தியாசமானது. ஹாரி நிச்சயமாக தனது சகோதரர் வில்லியம் மற்றும் இளவரசர் சார்லஸை போல் முடி உதிர்கிறது.

ஹாரியின் முடி உதிர்தல் வில்லியம் மற்றும் சார்லஸைப் பின்தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது, ஹெவிட் தனது அப்பா என்ற முட்டாள்தனமான கோட்பாட்டை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்