பிரித்தானியாவில் இரவு விடுதியில் உள்ள கழிப்பறைக்கு சென்ற கல்லூரி மாணவி.. அங்கு நடந்த மோசமான சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் குடிபோதையில் கண்ணாடி போத்தலை இளம்பெண்ணின் தலை மீது அடித்த கல்லூரி மாணவிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

பெத்தானி ஜோசப் (3) என்ற இளம்பெண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் இரவு விடுதிக்கு பெத்தானி சென்றார்.

அங்கு அவர் மது அருந்திய நிலையில் கழிப்பறைக்கு சென்றார். அப்போது அங்கு வேறு ஒரு பெண் வரிசையில் நின்றிருந்த நிலையில் அவரை பிடித்து பெத்தானி தள்ளியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அப்பெண், என்னை ஏன் பிடித்து தள்ளுகிறாய் என கேட்க இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் ஒருவரின் தலைமுடியை ஒருவர் பிடித்து கொண்டு சண்டை போட்டனர்.

அப்போது தனது கையில் இருந்த கண்ணாடி போத்தலை எடுத்து அந்த பெண்ணின் தலை மீது பெத்தானி அடிக்க அவருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து அப்பெண் பொலிசில் புகார் செய்ய பெத்தானி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

இதில் பெத்தானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு £385 அபராதமும், மது பழக்கத்தில் இருந்து மீள மருத்துவ சிகிச்சையும் எடுத்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதோடு சம்பளம் வாங்காமல் 100 மணி நேரம் அவர் வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்