மான்செஸ்டர் தாக்குதல்தாரி சகோதரருக்கு பணம்..! உயிரிழந்தவர்களுக்கு மறுப்பு: அநீதி இழைத்த நீதிமன்றம்

Report Print Basu in பிரித்தானியா

மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு வழக்கில் தாக்குதல்தாரியின் சகோதரருக்கு சாதகமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எதிராகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

மே 2017 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் உள்ள அரியானா கிராண்டே அரங்கில், சல்மான் என்ற நபர் நடத்தி தற்கொலை தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 22 கொல்லப்பட்டனர்.

அன்றைய தினமே லிபியாவில் உள்ள சல்மானின் சகோதரர் 22 வயதான ஹஷேம் அபேடி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆக்ஸ்போர்டு கிரீடம் நீதிமன்றத்தில் ஆஜரான அபேடி, தன் மீது சுமத்தப்பட்ட 22 கொலைக் குற்றச்சாட்டுக்கள், ஒரு கொலை முயற்சி மற்றும் குண்டுவெடிப்பை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார்.

விசாரணைக்கு பின் இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், மான்செஸ்டர் அரினா தாக்குதல்தாரியின் சகோதரருக்கு சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி மறுக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரின் குடும்பங்களுக்காக வாதாடிய பிரெண்டன் காக்ஸ், இது ஒரு தெளிவான அநீதி என குறிப்பிட்டார்.

பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு நீங்கள் உதவி வழங்கும்போது, தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு சட்ட உதவியை மறுப்பது நியாயமற்றது. பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களும் தப்பிப்பிழைப்பவர்களும் உதவி பெற மிக தகுதியானவர்கள், பிரச்சாரகர்களின் நீதிக்கான கோரிக்கைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டிய நேரம் இது என பிரெண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்