கிரேக்க நாட்டுக்கு கிரேக்க புராண கால பெண் போல உடையணிந்து சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கிரீசுக்கு சுற்றுலா சென்ற ஒரு பிரித்தானிய பெண், கிரேக்க புராணங்களில் வருவது போல் உடையணிந்து செல்ல, அவரை பொலிசார் கைது செய்து காவலில் வைக்க, மிரண்டு போனார்.

லண்டனைச் சேர்ந்த Adebola Sowemimo ஏதென்சுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் தன்னைப் பார்த்துக் கத்திக் கூச்சலிட்டதாகவும், தான் முறையான உடையணியவில்லை என்று கூறி தன்னை அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து வெளியேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் பொலிசாரை அழைத்து, தான் ஆபாசமாக நடந்து கொண்டதாக தன் மீது பொய்யாக புகாரளித்ததால், பொலிசார் தன்னை கைது செய்து காவலில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார் Adebola.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை தன்னை அருவருப்பான ஓரிடத்தில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ள Adebola, ஒரே ஆறுதல் அவரது காதலரையும் அவருடன் இருக்க அனுமதித்துள்ளதுதான் என்கிறார்.

ஆனால் ஒன்லைனில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளதாக தெரிவித்த Adebola, ஐந்து மணி நேரத்திற்கு பின், தான் விடுவிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்தார். தான் கருப்பினப் பெண் என்பதால், தன் மீதான நடவடிக்கை, இனவெறித்தாக்குதல் என்கிறார் Adebola.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்