சொக்கலேட் துண்டால் பறிபோன 11 வயது பிரித்தானிய சிறுவனின் உயிர்: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் சொக்கலேட்டால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 11 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை உருக்குலைய வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுவனின் தந்தை தாமஸ் பவுனால் பிளாக்பர்ன் கொரோனர் நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்துள்ளார்.

லங்காஷயர் நகரின் பர்ன்லே பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்துள்ளார் 11 வயதான ரஃபி பவுனால்.

இவருக்கு பால் பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடனே சிறுவன் விவகாரத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவனின் தந்தை தாமஸ் பவுனால், பால் சேர்க்கப்படாதது என கருதி மோரிசன்ஸ் சொக்கலேட் ஒன்றை அளித்துள்ளார்.

சிறுவன் ரஃபி அதில் இருந்து 4 துண்டு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் ரஃபி ஒவ்வாமையால் அவதிக்கு உள்ளாகியுள்ளான.

சிறுவனின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த தாமஸ், சிறுவனை காப்பாற்ற போராடியுள்ளார். மட்டுமின்றி, அவசர உதவிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து சிறுவனை ராயல் பிளாக்பர்ன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அன்றைய நாள் சுமார் 5.43 மணியளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

உடற்கூறு ஆய்வில் சிறுவன் சொக்கலேட்டில் கலந்திருந்த anaphylaxis என்ற பொருளாலையே மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 8 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை தாமஸ் பவுனால் நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்துள்ளார்.

பால் பொருட்கள் கலக்காத சொக்கலேட் என்பதாலையே தாம் தமது மகனுக்கு அளித்ததாகவும், ஆனால் அதனால் ஏற்பட்ட ஒவ்வாமையில் இருந்து தமது மகனை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்