ஈரானிடமிருந்து கப்பலை மீட்க இதான் ஒரே ஒரு வழி.. அரசுக்கு பிரித்தானியர்கள் அளித்த பலே யோசனை

Report Print Basu in பிரித்தானியா

ஈரானால் கடத்தப்பட்ட பிரித்தானியா எண்ணெய் டேங்கரை சிறப்புப் படைகளை பயன்படுத்தி மீட்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே போல், பாரசீக வளைகுடாவில் சிறப்பு கடற்படையை பயன்படுத்தி நெருக்கடியை தீர்க்க வேண்டும் எனவும் பிரித்தானியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று ஈரான், ஸ்டெனா இம்பீரோவுக்குள் பயந்துபோன குழுவினரின் முதல் படங்களை வெளியிட்டது. இந்த டேங்கர் ஈரானின் புரட்சிகர காவல்படையால் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டு பாரசீக வளைகுடாவில் வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா ட்விட்டர் பயனர் ஒருவர் கூறியதாவது: கப்பலை மீட்க ஒரே வழி தான் எஸ்ஏஎஸ் அல்லது எஸ்பிஎஸ் படைகளை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், ஈரானின் அட்டுழியம் தொடரும்.

இன்னொருவர் கூறியதாவது: எஸ்பிஎஸ் அல்லது எஸ்ஏஎஸ் படைகளை அனுப்பி டேங்கரை திரும்பப் பெற நம்மால் முடியாதா. ஈரான் அதன் படைகளை பயன்படுத்தி எப்படி கப்பலை கைப்பற்றியதோ, அதை நாம் திரும்ப செய்து கப்பலை மீட்போம் என கூறியுள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியா கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறியதாகக் கூறிய ஈரான், துப்பாக்கி படகு மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதலை நடத்தி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. குறித்த வீடியோவை ஈரானே வெளியிட்டது.

ஆனால் கப்பலின் உரிமையாளரான ஸ்டெனா பல்க், அனைத்து கடல்வழி மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்குவதாக கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்