பாதியில் நின்று போன திருமணங்கள்: விரக்தியில் நாயை திருமணம் செய்யும் மொடல் அழகி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஆண்கள் மீதான நம்பிக்கையை இழந்ததால் இங்கிலாந்தை சேர்ந்த மொடல் அழகி, தன்னை புரிந்து வைத்திருக்க கூடிய வளர்ப்பு நாயை திருமணம் செய்ய உள்ளார்.

இங்கிலாந்தின் கிழக்கு பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் நகரில் வசிக்கும் 49 வயதான எலிசபெத் ஹோட், கண்களை கவரும் வகையில் அழகாக இருந்தாலும், பல ஆண்களால் ஏமாற்றங்களை சந்தித்துள்ளார்.

எலிசபெத், பலரை சந்தித்தாலும் வாழ்நாளின் இறுதிவரை பயணிக்க ஒரு நல்ல காதலனை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கூறியிருக்கும் அவர், "நான் ஆண்கள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டேன். நான் 6 டேட்டிங் தளங்களை பயன்படுத்தியுள்ளேன். 8 ஆண்டுகளில் 220 ஆண்களைச் சந்தித்தேன். ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. நான் திருமண வயதை எட்டிவிட்டேன் என்பதை சொல்வதற்கு பயப்படுகிறேன். நிச்சயிக்கப்பட்டு 2 முறை திருமணம் நின்று போயுள்ளது.

அதனால் தற்போது ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ஆகஸ்ட் 2, 2018ம் ஆண்டு நான் ஒரு நாயை தத்தெடுத்து வளர்த்தேன். அதற்கு லோகன் என பெயரிட்டேன். நான் அதிக ஏமாற்றத்துடன் இருக்கும் சமயங்களில் லோகன் தான் எனக்கு ஆறுதல் தரும்.

அதனால் தற்போது லோகனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். அது ஒருபோதும் என்னை விட்டு விலகாது, நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். ஆகஸ்டு 2ம் திகதி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம். 20 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதனை பார்த்து நிறைய பேர் என்னை பைத்தியம் என்று கூறுவார்கள். ஆனால் நான் செய்வது சரி என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்