லண்டனில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு: ஏதற்காக?

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில் முகமூடி அணிந்து ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சாலையில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டன், டால்ஸ்டன், கிங்ஸ்லேண்ட சாலையிலே இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது வரை அவர்களது நிலைமை குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், கிங்ஸ்லேண்ட சாலையை மூடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை இத்தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

கருப்பு காரில் முகமூடி அணிந்து படி ஆயுதமேந்தி வந்த மர்ம நபர்கள், சாலையில் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன் போது ஒருவரின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும், நடைபாதையில் எல்லா இடங்களிலும் ரத்த புள்ளிகள் இருந்ததாக சம்பவத்தில் நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல், ரஷன் சார்லஸின் மரணத்தை நினைவு கூறும் விதத்தில் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 வயதான சார்லஸ், ஜூலை 22, 2017 அன்று டால்ஸ்டன் பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டபோது காஃபின் மற்றும் பாராசிட்டமால் கலவையை உள்ளடக்கிய ஒரு பொட்டலத்தை விழுங்கினார். விசாரணைக்கு பின்னர் அவரது மரணம் தற்செயலானது என்று பதிவு செய்யப்பட்டது.

சார்லஸ் மரணத்தால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி, பொருட்களுக்கு தீ வைத்ததால் அப்பகுதியின் தெருக்களில் கலவரம் ஏற்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்