விஜய் மல்லையா சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.. பிரித்தானிய நீதிமன்றத்தில் கோரிக்கை!

Report Print Kabilan in பிரித்தானியா

தொழிலதிபர் விஜய் மல்லையா சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று, இந்திய வங்கிகள் சார்பில் பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாரத் ஸ்டேட் வங்கி தலைமையிலான இந்திய வங்கிகளின் குழு ஒன்று, லண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், விஜய் மல்லையா கடனாக வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த தொகையை வசூலிக்க, அவருடைய சொத்துக்களை முடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மல்லையாவிற்கு சொந்தமான இரண்டு சூப்பர் பாய்மர கப்பல்கள், ஒரு சூதாட்ட விடுதி, கணக்கற்ற விலை உயர்ந்த கார்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய ஓவியங்கள், முன்பு எல்டன் ஜான் பயன்படுத்திய விலை உயர்ந்த பியானோ போன்றவற்றை பறிமுதல் செய்வதற்கு, நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும், விஜய் மல்லையா தனது சொத்துக்கள் குறித்த உண்மையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்