பெற்றெடுத்த குழந்தையை தூக்க தெரியாத இளவரசி மெர்க்கல்: செரினா வில்லியம்ஸின் பதில்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தனது மகன் ஆர்ச்சியுடன் இளவரசர் ஹரி கலந்துகொள்ளும் போலோ விளையாட்டை பார்க்க சென்ற போது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

Wimbledon - னில் நடைபெற்ற அரச குடும்ப போலோ போட்டியினை பார்ப்பதற்காக தனது மகன் ஆர்ச்சியுடன் சென்றுள்ளார்.

மகனின் ஞானஸ்தான நிகழ்வுக்கு பிறகு அவர் பொதுவெளியில் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி ஆகும். திருமணமான நாள் முதல் பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாகி வரும் மேகன், தனது குழந்தையை மார்புடன் சேர்த்து அணைத்துக்கொள்கையில், அக்குழந்தை சற்று நழுவி செல்வது போன்று இறுக்கம் இல்லாமல் இருந்தது.

இந்த புகைப்படம் வெளியானதையடுத்து, ஒரு குழந்தையை எப்படி கவனமாக தூக்குவது என்று மெர்க்கலுக்கு தெரியவில்லை, அக்குழந்தை நிச்சயம் அச்சம்கொண்டிருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த எதிர்மறை விமர்சனம் குறித்து மேகனின் தோழியும், பிரபல டென்னிஸ் வீராங்கனையுமான செரினா வில்லியம்ஸ் கூறியதாவது, ஊடகங்கள் மத்தியில் மேகன் மெர்க்கல் குறித்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் பற்றி எனக்கு தெரியாது.

எப்போதும் அவளுடன் இணைத்து ஏதேனும் ஒரு எதிர்மறை விமர்சனங்களே வருகிறது. ஆனால் அதனை நான் படிப்பது கிடையாது என பதிலளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...