தொடர் பதற்றம்: வலிமையான போர்க்கப்பலை வளைகுடாவிற்கு அனுப்பிய பிரித்தானியா

Report Print Vijay Amburore in பிரித்தானியா

வளைகுடாவில் நிலவி வரும் தொடர் பதற்றத்தால் தாக்குதலில் வலிமை வாய்ந்த மற்றொரு போர்க்கப்பலை பிரித்தானியா அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஜிப்ரால்டரில் ஒரு ஈரானிய எண்ணெய் கப்பலை, பிரித்தானியா கைப்பற்றியதையடுத்து தெஹ்ரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பிரித்தானியாவின் எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 வகை போர் கப்பலை, மூன்று ஈரானிய ஆயுத கப்பல்கள் நேற்று சுற்றி வளைத்ததாக செய்தி வெளியானது. ஆனால் இதனை ஈரான் மறுத்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏவுகணை, ட்ரோன் மற்றும் விமான தாக்குதல்களை முறியடிக்கும் சக்தி வாய்ந்த எச்.எம்.எஸ் டங்கன் போர்க்கப்பலை பிரித்தானியா வளைகுடாவிற்கு அனுப்பியுள்ளது.

"எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 போர்க்கப்பலில் இருக்கும் பணியாளர்களை மாற்றி விடுவதற்காகவும், தொடர்ச்சியான கடல்சார் பாதுகாப்பு இருப்பை பிரித்தானியா பராமரிப்பதை உறுதி செய்வதற்காகவும் மட்டுமே எச்.எம்.எஸ். டங்கன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவிற்கும் - ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் இருந்து வரும் நிலையில், பிரித்தானியா வலிமையான போர்க்கப்பலை வளைகுடாவிற்கு அனுப்பியிருப்பது, இன்னும் அழுத்தத்தை அதிகரித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...