சிரித்துக் கொண்டே தேவாலயத்திற்கு தீ வைத்த நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள பழம்பெருமை வாய்ந்த தேவாலயம் ஒன்றிற்கு சிரித்துக் கொண்டே தீவைத்த நபர் ஒருவரின் தலையில் தீப்பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், Tristan Morgan (52) என்னும் அந்த நபர், தேவாலய ஜன்னல் ஒன்றில் கோடரியால் துளையிட்டு அதனுள் பெட்ரோலை ஊற்றுவதையும், காகிதத்தில் தீ வைத்து அதை அந்த துவாரம் வழியாக தேவாலயத்திற்குள் வீசுவதையும் காணலாம்.

ஆனால் அவர் எதிபாராத விதமாக, தேவாலயத்திற்குள் இருந்து யாரோ ஊதுவது போல, நெருப்பு அவரையே தாக்குகிறது.

அப்படியும் சற்றும் பதறாத Tristan, நின்று நிதானமாக தனது தலையில் பிடித்த நெருப்பை அணைத்துவிட்டு அங்கிருந்து செல்வதைப் பார்க்கும்போது, எப்படியும் அந்த தேவாலயத்தைக் கொளுத்தினால் போதும் என்பது போல் இருக்கிறது அவரது நடவடிக்கைகள்.

வீடியோவை காண

Exeterஇலுள்ள யூதர்களுக்கான அந்த தேவாலயம், பிரித்தானியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.

இந்த வீடியோ நேற்று லண்டனிலுள்ள Old Bailey நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் போட்டுக் காட்டப்பட்டது.

தீவைத்தல் மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் Tristan மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு நிரந்தர மன நல மருத்துவமனை வாசம் தண்டனையாக அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாண்டுகளுக்கு தீவிரவாத கண்காணிப்பு உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது, அதாவது நீண்ட காலம் அவர் பொலிசாரின் கண்காணிப்பிலேயே இருப்பார்.

பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, Tristan மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவருக்கு மன நல மருத்துவமனை வாசம்தான் பொருத்தமான தண்டனையாக இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்திடம் கோரிக்கை வைத்ததன் பேரில் அங்கிருந்த CCTV கெமரா காட்சிகள் பெறப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அந்த காட்சிகளிலிருந்து, Tristan எந்த அளவுக்கு திட்டமிட்டு, தேவாலயத்தை நாசமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார் என்பதும், அதிலிருந்து அவர் தீவிர வலது சாரிக் கொள்கைகளும், யூத இன வெறுப்பும், வெள்ளை இனம் உயர்ந்தது எனக் கருதும் வெள்ளை மேலாதிக்க எண்ணங்கள் கொண்டவர் என்பதும் தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேவாலயத்தில் அவர் தீவைக்கும்போது யாரும் இல்லாதிருந்ததும், அவரே சிறு காயங்களுடன் தப்பியதும் அதிர்ஷ்டம்தான் என்கின்றனர் பொலிசார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...