இறக்கபோவதாக நினைத்து தனது இறுதிசடங்குக்கு திட்டம் போட்ட பெண்.. பின்னர் நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த பெண் இறந்துவிடுவேன் என நினைத்து தனது சொந்த இறுதிச்சடங்கு குறித்து திட்டமிட்ட நிலையில் ஆச்சரியமளிக்கும் வகையில் உயிர் பிழைத்துள்ளார்.

ஜெம்மா ஜோலி (41) என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 2015ல் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஜோலியின் கல்லீரல் செயலிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து 2016-ல் ஜோலிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன்பின்னர் குடும்பத்தாருடன் ஆறு மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்த ஜோலிக்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டது.

மஞ்சள் காமாலை நோய் தாக்கினால் அது கல்லீரலை பெருமளவில் பாதிக்கும் என்ற நிலையில், ஜோலியின் கல்லீரல் மீண்டும் செயலிழந்தது.

இதனால் ஜோலி மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இனி தான் உயிர் பிழைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த ஜோலி தனது இறுதிச்சடங்கு எவ்வாறு நடக்க வேண்டும் என திட்டம் போட்டு குடும்பத்தாரிடம் கூறினார்.

இந்த சமயத்தில் தான் கடந்தாண்டு அவருக்கு மீண்டும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த முறை வேறு முறையில் கவனமாக நடத்தப்பட்ட சிகிச்சையில் ஜோலிக்கு கல்லீரல் மாற்றி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் அவர் உடல்நலம் தேறி தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆழ்ந்து வருகிறது.

ஜோலி கூறுகையில், என் வாழ்க்கை முடிய போகிறது என எண்ணி இறுதிச்சடங்கு குறித்து திட்டம் போட்டேன்.

ஆனால் எனக்கு மறுபிறவி கிடைத்தது போல மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...