நான் ஒன்றும் அவரை புகைப்படம் எடுக்கவில்லை: மேகனுக்கு சரியான மூக்கறுப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

டென்னிஸ் ரசிகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை எடுக்கும்போது பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் பாதுகாவலர்களால் எச்சரிக்கப்பட்டபோது கூறிய பதில் மேகனுக்கு சரியான மூக்கறுப்பாக அமைந்தது.

Hasan Hasanov (58), பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் முன் நின்று புகைப்படம் எடுக்க முயலும் படம் ஒன்று செய்திகளில் வெளியானது.

அப்போது மேகனின் பாதுகாவலர் ஒருவர் வந்து Hasanஐ எச்சரிக்கும் படமும் வெளியானது.

நடந்தது என்னவென்றால் Hasan புகைப்படம் எடுக்க முயலும்போது, மேகனின் பாதுகாவலர்கள் வந்து, மேகன் தனி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருப்பதாகவும், யாரும் அவரை புகைப்படம் எடுக்கக்கூடாதென்றும் எச்சரித்துள்ளனர்.


ஆனால், Hasan தான் மேகனை படம் எடுக்கவில்லை என்றும், அவர் அங்கே உட்கார்ந்திருப்பதை தான் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தான் விளையாடிக் கொண்டிருக்கும் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் ஒரு செல்பி எடுக்க முயன்றபோதுதான் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார் Hasan.

அவர் மேகன் முன் நிற்கும் புகைப்படத்தை கவனித்தால், அவர் கூறுவது உண்மைதான் என்பதைக் காணலாம்.

அவர் தனக்கு பின் நின்ற ரோஜர் பெடரரை போகஸ் செய்வதை அவரது செல் போனில் காணமுடிகிறது.

Hasan கூறும்போது, தான் ரோஜர் பெடரர் மீது கவனம் செலுத்தியதால், தனக்கு முன்னால் மேகன் உட்கார்ந்திருப்பதைக் கவனிக்கவேயில்லை என்றும், அப்படி, மேகனையோ, ஹரியையோ அல்லது ராஜ குடும்பத்தார் யாரை புகைப்படம் எடுக்க விரும்பினாலும் நிச்சயம் அதற்குமுன் அனுமதி கேட்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...