பிரித்தானிய ராணி எலிசபெத் மரணமடைந்தால் அரச குடும்பத்தில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தால் அரச குடும்பத்தில் 4 முக்கிய மாற்றங்கள் உடனடியாக ஏற்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

தற்போது 93 வயதாகும் ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தால் நாடு முழுவதும் 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

அதன் பின்னரே அரச குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.

முதலாவதாக தேசிய கீதத்தில் மாற்றம் கொண்டுவரப்படும், அரசரை புகழ்ந்து பாடப்பட்டிருக்கும் தேசிய கீதமானது இனி ராணியாரை புகழ்வது போல் மாற்றப்படும்.

மட்டுமின்றி ராணியாரின் வாரிசாக இளவரசர் சார்லஸ் இருப்பதால், நாணயங்கள் மற்றும் பணத் தாள்களில் அவரது முகம் பதிக்கப்படும்.

முடி சூடப்பட்டு நீண்ட 65 ஆண்டுகளாக பொறுப்பில் இருக்கும் ராணியார் மரணமடைந்தால் அரச குடும்பத்தில் முக்கியமாக நான்கு மாற்றங்கள் ஏற்படும்.

முதலாவதாக இளவரசர் எட்வர்ட்டுக்கு புதிய பட்டம் வழங்கப்படும். அவரை இனி Duke of Edinburgh என்றே அழைக்கப்படுவார். ஆனால் இந்த பட்டமானது இளவரசர் பிலிப்பின் காலத்திற்கு பின்னரே வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கும் புதிய பட்டம் வழங்கப்படும், ஆனால் ராணியார் என அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் அரச குடும்பம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் அனைவருக்கும் எழுந்துள்ளது.

மூன்றாவாதாக இளவரசர் சார்லஸ் அரசர் பொறுக்கு மாறுவதால் இளவரசர் வில்லியம் அடுத்த பதவிக்கு வருவார்.

4-வதாக இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இனிமேல் இளவரசி என அழைக்கப்படலாம்.

பிரித்தானிய ராணியாரின் பிள்ளைகளை மட்டுமே இளவரசி என அழைக்கப்படும் விதி இருந்தாலும், வில்லியமின் தாயார் டயானா பரவலாக இளவரசி டயானா என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்