பிரித்தானியாவில் படித்துவிட்டு சென்னைக்கு வந்தது ஏன்? பிரபல தமிழ் நடிகர் சொன்ன காரணம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் படித்து விட்டு தற்போது தமிழகத்திற்கு வந்து படத்தில் நடித்துக் கொண்டிருப்பது ஏன் என்பதை நடிகர் வெற்றி கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் உலகில் இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கின்றனர்.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நடிகரான வெற்றி பிரித்தானியாவில் படித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்தது ஏன் என்று பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், நான் படித்தது பிரித்தானியாவில் தான் படித்து இன்ஜினியரிங். ஆனா எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை.

இதனால் உடனடியாக சென்னைக்கு வந்துவிட்டேன். அப்பா எனக்காக சென்னையில் பிசினஸ் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்.

ஆனால் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை என்பதால், பிசினசை விட்டுவிட்டு கூத்துப் பட்டறையில் சேர்த்து நடிக்க கத்துக் கொண்டேன்,

அதன் பின் மேடை நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருந்த போது, சினிமாவில் நடிப்பதற்காக பல அலுவலங்களில் ஏறி இறங்கினேன்.

எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காத காரணத்தால், என் அப்பாவே ஒரு படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். அப்படி தான் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்தேன், அந்த படம் பலரிடம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதன் பின் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தன, ஆனால் அவை அனைத்தும் நான் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த கேரக்டராகவே வந்ததால், சில ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்தேன்.

தற்போது என்னுடைய நடிப்பில் ஜுவி என்ற படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இனி வெளிநாட்டிற்கு செல்ல எல்லாம் விருப்பம் இல்லை, வித்தியாசமான படங்கள் மூலம் தான் விஜய் சேதுபதி இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். நானும் அதே போன்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்