ஐரோப்பியாவை அவமதித்த பிரித்தானியர்கள்.. நாடாளுமன்றத்தில் செய்த செயல்

Report Print Basu in பிரித்தானியா

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தின் போது பிரித்தானியாவின் பிரெக்ஸிட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திரும்பி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தொடக்க விழாவின் போது, பிரித்தானியாவை சேர்ந்தவரும், பிரெக்ஸிட் ஆதரவாளருமான நைகல் ஃபரேஜின், பிரெக்ஸிட் கட்சியை சேர்ந்த 29 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரெக்ஸிட் கட்சியை சேர்ந்த 29 உறுப்பினர்களும் திரும்பி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரெக்ஸிட் கட்சித்தலைவர் நைகல் ஃபரேஜின் கூறியதாவது, அக்டோபர் 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற உள்ள நிலையில், எனது கட்சி உறுப்பினர்கள் நவம்பர் 1ம் திகதி வரை இங்கு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் அடுத்து பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன், ஒப்பந்தத்துடன் அல்லது இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து, அவர்கள் பேசுவதை கவனிக்கவோ, நாட்டிற்காக பேச போவதோ இல்லை. முதல் அவமதிப்பின் மூலம் நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் என்பதை அவர்கள் அறிவார்கள், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என நைகல் ஃபரேஜின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers