பிரித்தானியாவில் 9 வயது சிறுமியை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட இளைஞன்... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 9 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி விட்டு 21 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Tamworth பகுதியைச் சேர்ந்தவர் Carl. 21 வயதான இவர் Chasewater Reservoir பகுதியில் இருக்கும் ஆற்றில் 9 வயது சிறுமி நீரில் சிக்கி உயிருக்கு போராடுவதைக் கண்டுள்ளார்.

இதனால் உடனடியாக ஆற்றில் குதித்த அவர் சிறுமியை காப்பாற்ற போராடியுள்ளார். அப்போது அவரும் ஆற்றில் சிக்கியதால், இருவரும் நீரில் சிக்கிக் கொண்டதாக பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் பொலிசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு விரைவதற்குள் சிறுமியை காப்பாற்றிய இளைஞன் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்த கார்ல் உண்மையான ஹீரோ என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கார்ல் குடும்பத்தினர், நீ நல்ல சகோதரனான், வீட்டில் ஒரு நல்ல நண்பனான இருந்தாய், ஆனால் இப்போது உன்னை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.

உன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்னும் முழுமையான விசாரிக்கவில்லை எனவும், தொடர் விசாரணைக்கு பின்னரே சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers